Home சினிமா தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

ஜோஜு ஜார்ஜ்

மலையாள திரையுலகில் திறமையான நடிகர்களில் ஒருவர் ஜோஜு ஜார்ஜ். இரட்டா, பணி, நயட்டு என பல நல்ல திரைப்படங்களில் மலையாளத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இதன்பின், ஜோஜு தமிழில் நடித்து வெளிவந்துள்ள படம்தான் தக் லைஃப். இப்படத்தில் முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

கமலின் தீவிர ரசிகரான இவர், தினமும் படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கு ஐ லவ் யூ சொல்லிக்கொண்டே இருந்ததுள்ளார். இதனை நகைச்சுவையாக படத்தின் ப்ரோமோஷன் பேட்டிகளில் கமல் பகிர்ந்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் தன்னை பற்றி கமல் பேசியவுடன் ஜோஜு கண்கலங்கினார்.

கமல்ஹாசனை இயக்க ஆசை, வடசென்னை 2 ரிலீஸ்?.. இயக்குநர் உடைத்த ரகசியம்

சம்பளம் 

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version