ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள Joker: Folie a Deux திரை படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
ஆர்த்தர் பிளெக் செய்த கொலைகளுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.
அவரது தரப்பு வக்கீல் ஆர்த்தருக்கு மனநல பிரச்சனை உள்ளது என்றும், அவருக்குள் இருக்கும் ஜோக்கர் Split Personality தான் கொலைகளை செய்ததாக வாதத்தை முன் வைக்கிறார்.
இறுதியில் ஆர்த்தர் உண்மையில் மனநல பிரச்சனையால் கொலைகளை செய்தாரா அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க நடிக்கிறாரா என்ற கேள்விக்கு விடைதான் படத்தின் கதை.
வெளிநாட்டில் முதன்முறையாக ஒளிபரப்பாக போகும் ரஜினியின் வேட்டையன்… எங்கே தெரியுமா?
படம் பற்றிய அலசல்
2019ஆம் ஆண்டில் வெளியான Joker படத்தின் தொடர்ச்சியாக இந்த Joker: Folie a Deux படம் வெளியாகியுள்ளது.
கடந்த பாகத்தில் 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஆர்த்தர், ஆர்க்கம் ஸ்டேட் மருத்துவமனையில் ஹர்லீன் லீ எனும் லேடி காகாவை சந்திக்கிறார்.
இருவருக்குமான காட்சிகள் ரொமான்டிக் சைக்கோ ட்ராமா கட்சிகளாக நகர்கின்றன.
முழுக்க முழுக்க நீதிமன்ற விசாரணை கதைக்களத்திலேயே படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் டோட் பிலிப்ஸ்.
அதன் காரணமாகவே திரைக்கதை மெதுவாக நகரும் உணர்வை நமக்கு தருகிறது.
எனினும் நடிப்பில் அனைவரும் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, ஜோக்கின் பீனிக்ஸ் ஜோக்கர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஜோக்கர் பெரிய சம்பவங்களை செய்ய போகிறார் என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் ஏமாற்றத்தை தரலாம்.
தனக்காக ஆர்த்தர் வாதாடும் அந்த காட்சி சீட் நுனியில் உட்கார வைக்கிறது.
லேடி காகா அசால்ட்டாக தீ வைக்கும் காட்சியிலும், ஆர்த்தரை வெறுக்கும் காட்சியிலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
தனது வக்கீலை ஆர்த்தர் நீக்கும் காட்சி நச். ஆனால், படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று.
க்ளாப்ஸ்
க்ளாப்ஸ்
நடிகர்களின் யதார்த்த நடிப்பு
இசை
படத்தின் மேக்கிங்
பல்ப்ஸ்
படத்தின் நீளம்
பொறுமையை சோதிக்கும் சில காட்சிகள்
மொத்தத்தில் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும், ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பிற்காகவே ஒருமுறை இப்படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் : 2.75/5