Home இலங்கை அரசியல் தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி அநுரவுக்காக ஏற்பட்டுள்ள மாற்றம்

தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி அநுரவுக்காக ஏற்பட்டுள்ள மாற்றம்

0

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திசாநாயக்க சிறுபான்மை மக்களின் அதீத ஆதரவை பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் அதீத நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியாக அநுர திகழ்வதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

அதிகரித்துள்ள வாக்கு பலம்

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குபலம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 1,375 வாக்குகள் பெறப்பட்டன. அது 0.37 வீதமாகும். எனினும் இம்முறை 27,086 வாக்குகளாக அதிகரித்துள்ளது.

இது யாழ். மாவட்டத்தில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் 7.29 சதவீதம், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 25,711 வாக்குகள் அதிகமாகும்.

அனைத்து மாவட்டங்களிலும் அதிக வளர்ச்சி பெற்ற மாவட்டமாக யாழ் மாவட்டம் மாறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் வன்னி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி 1,156 வாக்குகளை பெற்றது. இது அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 0.54 சதவீதமாகும். எனினும் இம்முறை 21,412 வாக்குகள் பதிவாகியுள்ளன, இது செல்லுபடியாகும் வாக்குகளில் 9.86 சதவீதமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு மேலதிகமாக 20,256 வாக்குகள் கிடைத்துள்ளன.

 

அத்துடன், 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,304 வாக்குகள் கிடைத்தன, இது 0.76 வீதமாகும்.

எனினும் இம்முறை அது 38,832 வாக்குகளாக அதிகரித்துள்ளன. இது 12.19 சதவீதமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை அதிகரித்த வாக்குகளின் எண்ணிக்கை 36,528 ஆகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்பதே தற்போதைய பேசும்பொருளாக மாறியுள்ளது.

வடபகுதியில் தேசிய மக்களின் சக்தியின் அலையானது இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பினை ஏற்படத்தலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version