Home இலங்கை சமூகம் தம்பலகாமம் வைத்தியசாலை கட்டிட திறப்பு விழாவில் ஊடகர்களுக்கு புகைப்படம் எடுக்க மறுப்பு

தம்பலகாமம் வைத்தியசாலை கட்டிட திறப்பு விழாவில் ஊடகர்களுக்கு புகைப்படம் எடுக்க மறுப்பு

0

Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவின் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விழா நேற்று (06) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், ஊடவியலாளர்கள் புகைப்படம் எடுக்க சென்ற போது வைத்தியசாலை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் உரிய அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற வேண்டும் என வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீக்கிரையாக்கப்பட்ட சொத்துக்கள்

இது தொடர்பில் உரிய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் ஆகியோர்களை தொடர்பு கொண்டு வினவிய போது தங்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை 2019.06.27இல் அப்போதைய பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவால் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அடிக்கல் நடப்பட்டது.

பின்னர்  கட்டிட வேலைகள் சுமார் இரண்டரை வருட காலமாக இடை நிறுத்தப்பட்டது. இப்பிரதேச வைத்தியசாலையின் பழைய கட்டிடமானது 2023.04.01 அன்று தீக்கிரையாக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் வீணாகியிருந்தன.

NO COMMENTS

Exit mobile version