Home சினிமா நியாயம் கிடைக்கவில்லை, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா போட்ட பதிவு…

நியாயம் கிடைக்கவில்லை, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா போட்ட பதிவு…

0

மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

இந்நிகழ்ச்சிக்கு முன் சில படங்கள் நடித்தாலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பின் தனக்கு தெரிந்த சமையல் தொழிலில் களமிறங்கியவர் அதில் குறைந்த நேரத்திலேயே பெரிய வெற்றியை கண்டார்.

எந்த ஒரு பிரபலம், அரசியல்வாதியின் திருமணம் என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் குழு தான் உள்ளது. இப்போது வெளிநாடுகளிலும் தனது தொழிலை பிரபலப்படுத்தியுள்ளார்.

பிரபலம் பதிவு

சொந்த தொழில் மூலம் பெரிய அளவில் முன்னேறிய மாதம்பட்டி ரங்கராஜ் சொந்த வாழ்க்கை குறித்து கடந்த சில வாரங்களாக சர்ச்சையான தகவல்கள் வருகின்றன.

அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்தார் என்று புகைப்படங்கள் வர அவர் 6 மாத கர்ப்பமாக இருக்கும் செய்தியும் வந்தது.

ஆனால் ஜாய் கிரிசில்டா கடந்த சில வாரங்களுக்கு முன் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டார், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

நேற்று குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி, மாதம்பட்டி ரங்கராஜை போல் பேசி ஒரு வீடியோ வெளியிட அது வைரலானது. இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாவில், பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார், தர்மம் ஜெயிக்கும் என பதிவு போட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version