புதிய இணைப்பு
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் சாட்சியம் அளித்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இன்று(24) யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர். சாட்சிகள் நெறிப்படுத்தலில் முதலாவது கண்கண்ட சாட்சியாளரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சாட்சியமளித்தார்.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
வழங்கிய சாட்சியம்
அதன்போது, சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சர்மினி பிரதீபன் சாட்சியை குறுக்கீடு செய்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற போது யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் தற்போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகவுமுள்ள நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சம்பவம் இடம்பெற்ற 2017ம் ஆண்டு மாணவி வித்தியா தவறான முறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் நீதிபதியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது தன்மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக என்று மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
அதன்போதே தனது மெய்ப்பாதுகாவலர் எதிரிக் கூண்டில் நிற்கும் எதிரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் சாட்சியாளரான மா.இளஞ்செழியன் அடையாளம் காண்பித்தார்.
தொடர்ந்து இரண்டாவது கண்கண்ட சாட்சியாளரான நீதிபதியின் காவல்துறை மெய்ப் பாதுகாவலரும் எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவரும் சாட்சியமளித்தார்.
இந்நிலையில், இரண்டாவது சாட்சியின் சாட்சியத்தை மேல் நீதிமன்ற நீதிபதி D.S.சூசைதாஸன் நாளை (25) வரை ஒத்தி வைத்துள்ளார்.
தமிழர் பகுதியில் நடந்த விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்
முதலாம் இணைப்பு
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அவர் வருகைத்தந்துள்ளார்.
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ் மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஈரான் உடனான தொடர்பு: அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை
துப்பாக்கி பிரயோகம்
இதற்கமைய இன்று(24) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 22ஆம் திகதி அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் மரணம்: சந்தேகத்தில் காவல்துறையினர்
ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |