Home சினிமா முதல் நாளே மாபெரும் வசூல் சாதனை படைத்த Jurassic World Rebirth.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

முதல் நாளே மாபெரும் வசூல் சாதனை படைத்த Jurassic World Rebirth.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

Jurassic Park

1993ம் ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படம்தான் Jurassic Park. இதன்பின், The Lost World: Jurassic Park, Jurassic Park III வெளிவந்தன.

இந்த Jurassic Park பாகங்ள் முடிவுக்கு வர, இதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து புதிய தோற்றத்தில் Jurassic World வெளிவந்தது. இதன்பின் Jurassic World: Fallen Kingdom, Jurassic World Dominion ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அதனுடைய அடுத்த படைப்புதான் இந்த Jurassic World Rebirth.

மெட்ரோ..இன் டினோ: திரை விமர்சனம்

Jurassic World Rebirth

Gareth Edwards இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் Scarlett Johansson, Mahershala Ali மற்றும் Jonathan Bailey ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான Jurassic World-ன் இந்த Rebirth திரைப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டு நேற்று திரையரங்கில் வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால், குழந்தைகள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், Jurassic World Rebirth திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 1000 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version