சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது. அந்த படம் பற்றிய நினைவுகளை ரஜினி பகிர்ந்து இருக்கும் பேட்டி தற்போது வெளியாகி இருக்கிறது.
படையப்பா தனது சொந்த கதை என்றும், அதற்கு திரைக்கதை எழுதி இயக்கியது மட்டும் தான் கே.எஸ்.ரவிக்குமார் என ரஜினி கூறி இருக்கிறார்.
படையப்பா 2
“மேலும் படையப்பா 2ம் பாகம் பற்றியும் ரஜினி அறிவித்து இருக்கிறார். 2.0, ஜெயிலர் 2 படம் போல படையப்பா 2ம் பாகம் எடுக்க வேண்டும் என தோன்றியது.”
“அடுத்த ஜென்மத்திலாவது உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன் என நீலாம்பரி சொல்லி இருப்பார். அதனால் அதை வைத்து ‘நீலாம்பரி – படையப்பா 2’ என படம் எடுக்க தற்போது கதை discussion செய்து கொண்டிருக்கிறேன்” என ரஜினி தெரிவித்து உள்ளார்.
காஞ்சனா – முனி2 மாதிரி#Neelambari – #Padayappa-2 👀#SuperstarRajinikanth eh அப்படி ஒரு ஐடியாவா இருக்குனு சொல்றார் 👀
pic.twitter.com/SFrSTql9ad— Prakash Mahadevan (@PrakashMahadev) December 8, 2025
