Home இலங்கை அரசியல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

0

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி (JVP) அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) வெளியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.

காணாமல் போனவர்களுக்கு நீதி

வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது,

ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே எங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும்.

யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை, அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version