Home இலங்கை சமூகம் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் பெரும் பரபரப்பு! சுற்றிவளைத்த மக்கள்

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் பெரும் பரபரப்பு! சுற்றிவளைத்த மக்கள்

0

புதிய இணைப்பு  

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்க்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள  பொலிஸார் தயாராகியுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி அம்ஷிக்கு நீதிகோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர் ஒருவருக்கும் ஏனைய போராட்டக்காரர்களுக்கும்  இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

குறித்த பாடசாலையை காட்ட வேண்டாம் என்று குறித்த நபர் கோரியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

முதலாம் இணைப்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்த மாணவி டில்ஷி அம்ஷிகாவிற்கு நீதி கோரி கொழும்பில் இன்று(8) மாபெரும் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போராட்ட பேரணி ,பம்பலப்பிட்டி இராமநாதன் மத்திய கல்லூரியிலிருந்து கொட்டாஞ்சேனை வரை செல்லவுள்ளது.

 இந்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

நேரலை..

[2NEWICW]

NO COMMENTS

Exit mobile version