Home இலங்கை சமூகம் அம்ஷிக்கு நீதிகோரிய போராட்டம்! டுப்ளிகேஷன் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

அம்ஷிக்கு நீதிகோரிய போராட்டம்! டுப்ளிகேஷன் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

0

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி அம்ஷிக்கு நீதிகோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டியில் உள்ள டூப்ளிகேஷன் சாலை முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்த மாணவி டில்ஷி அம்ஷிகாவிற்கு நீதி கோரி கொழும்பில் இன்று(8) மாபெரும் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

போராட்ட பேரணி

குறித்த போராட்ட பேரணி ,பம்பலப்பிட்டி இராமநாதன் மத்திய கல்லூரியிலிருந்து கொட்டாஞ்சேனை வரை செல்லவுள்ளது.

இந்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version