Home இலங்கை அரசியல் பழி வாங்குவோம்…! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

பழி வாங்குவோம்…! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

0

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி அமைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பு மாநகரசபையில் 11 ஆசனங்களே தேசிய மக்கள் சக்திக்கு போதவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியே (Tilvin Silva) என்றும் நாம் 267 சபைகளில் வெற்றி பெற்றுள்ளோம்.   

தேர்தலில் மிகப்பெரும் வெற்றி

அதில் 120 இடங்களில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சபைகள் அமைக்கலாம் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் 32 சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் பிரச்சனை இல்லாமல் சபைகள் அமைக்க முடியும்.

சம காலத்தில் சில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு தற்போது இணைந்து சபைகள் அமைக்க முயற்சி செய்வது
ஒழுக்கவிதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மாநகரசபை

எதிர்க்கட்சிகள் சபை அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகள் பெற்றிருந்தாலும் அவற்றில் 13 இடங்களில் தனியாக சபைகள் அமைக்க முடியாத நிலைமை உள்ளது.

மற்ற கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் உள்ளது பல இடங்களில் ஆட்சி அமைப்பது அரசாங்கத்துக்கே சாதகமாக
உள்ளது எனவும் கொழும்பு மாநகரசபையில் 11 ஆசனங்கள் எமக்கு போதவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தடை ஏற்படுத்தினால் அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்த் தாக்கங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.  

https://www.youtube.com/embed/QIyPdQf7FfE

NO COMMENTS

Exit mobile version