மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்திற்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல பெலவத்த பகுதியில் ஜே.வி.பி தலைமையகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணிலின் வழக்கு இன்று..
பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
எதிர்க்கட்சித் தரப்பினர்கள் கொழும்பில் கூடும் வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பல இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
