நாடு அபிவிருத்தியடையவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எமக்கு பாரிய சவால் உள்ளது.ஐ.தே.க,ஐக்கிய மக்கள் சக்திகள் இணைவது எமக்கு சவாலல்ல.பூச்சியங்கள் இரண்டு இணைந்தால் அதுவும் பூச்சியம் தான்.எம்மிடம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பலம்,பிரதேச சபை,நகர சபை ஆட்சிப்பலம் இருக்கிறது.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. மீதமிருப்பதையும் நாங்கள் நிறுத்த முற்பட்டுள்ளோம்.வங்குரோத்தான நாடே எமக்கு வழங்கப்பட்டது.
இதை கட்டியெழுப்புவது என்பது சவாலான காரியமாகும்.கடந்த ஆட்சியினர் சென்ற பாதையில் எமக்கு செல்ல முடியாது.எமது திட்டங்களின் படி முன்னோக்கி செல்ல முடியும்.அப்படி செய்தாலேயே நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.
அவர்கள் போன பாதையில் சென்றிருந்தால்,மீளவும் பாதாளத்தை நோக்கியே சென்றிருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
