Home இலங்கை அரசியல் தாராளமாக குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள்.. அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவிப்பு

தாராளமாக குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள்.. அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் யாருக்காவது குற்றச்சாட்டுகள் இருந்தால் முறைபாடு செய்யலாம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

சொத்து விபரங்கள் 

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள சொத்து மதிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடரந்துரையாற்றிய அவர், “தேசிய மக்கள் சக்தியின் பிரதமராக இருக்கட்டும் அல்லது அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத உள்ளூராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் சட்டம் ஒன்றாக தான் இருக்கிறது. எனக்கும் இது பொருந்தும்.

எமது உறுப்பினர்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நாம் தடையாக இருக்க மாட்டோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version