Home இலங்கை அரசியல் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு

கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு

0

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவிக்கு கபீர் ஹாஷிமின் (Kabir Hashim) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோபா குழுவின் தலைவர் பதவியில் இருந்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பதவி விலகல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போது அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.

நியமனம் விரைவில் வழங்கப்படும்

அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள கபீர் ஹாசிமின் நியமனம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version