Home சினிமா மலேசியாவில் ரீமேக் ஆகும் லோகேஷ் கனகராஜின் கைதி படம்.. செம மாஸான First லுக் போஸ்டர்

மலேசியாவில் ரீமேக் ஆகும் லோகேஷ் கனகராஜின் கைதி படம்.. செம மாஸான First லுக் போஸ்டர்

0

கைதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய சினிமாவில் மிகமுக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க நரேன், அர்ஜுன் தாஸ், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

ரீமேக் 

தமிழில் வெளிவந்த கைதி திரைப்படத்தை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தியில் ரீமேக் செய்திருந்தார். இன்று வரை லோகேஷின் மாஸ்டர் பீஸாக கைதி படம் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கைதி திரைப்படத்தை தற்போது மலேசியாவில் ரீமேக் செய்கின்றனர். ரீமேக் செய்யப்படும் இப்படத்திற்கு ‘Banduan’ என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் First லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

NO COMMENTS

Exit mobile version