Home சினிமா காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்தி.. கொந்தளித்த நடிகையின் பதிவு

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்தி.. கொந்தளித்த நடிகையின் பதிவு

0

சினிமா துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் இணையத்தில் பெரிய அளவில் உடனே வைரல் ஆகிவிடுகிறது.

அப்படி தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பற்றி ஒரு தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

அவர் பயங்கரமான விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என செய்தி பரவி இருக்கிறது. அது பற்றி காஜல் தற்போது கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

முற்றிலும் பொய்

நான் விபத்தில் சிக்கி, இறந்துவிட்டதாக ஒரு செய்தியை பார்த்தேன். உண்மையில் இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இது முற்றிலும் பொய்.

கடவுளின் கருணையால் நான் நலமாக இருக்கிறேன் என உறுதிப்படுத்துகிறேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பவோ நம்பவோ வேண்டாம் என காஜல் பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version