Home இலங்கை அரசியல் பேரினவாத அரசு தலைவரை பெரும்பான்மை இனத்தவரே தெரிவு செய்யட்டும்: செல்வராஜா கஜேந்திரன்

பேரினவாத அரசு தலைவரை பெரும்பான்மை இனத்தவரே தெரிவு செய்யட்டும்: செல்வராஜா கஜேந்திரன்

0

பேரினவாத அரசு தலைவரை பெரும்பான்மை இனத்தவரே தெரிவு செய்யட்டும் என்றே தேர்தலை புறக்கணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சமாதான உடன்படிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கான ஆதரவை வழங்கிய போதிலும் சமாதான உடன்படிக்கையில்
ஒப்புக்கொண்ட விடயங்களை அவர் நிறைவேற்ற வில்லை.

ஆனால், அதற்கு மாறாக அவர் தமிழர்களுடைய தேசத்தையும் அவர்களுடைய உரிமை போராட்டத்தையும் நசுக்குகின்ற செயற்பாட்டையே மேற்கொண்டார்.

Source: https://tamilwin.com/article/kajendran-mp-press-comment-jaffna-1726682832

NO COMMENTS

Exit mobile version