Home சினிமா 1000 கோடி வசூல் சாதனை.. கல்கி 2898 AD படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

1000 கோடி வசூல் சாதனை.. கல்கி 2898 AD படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

கல்கி 2898 AD

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. நாக் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார்.

இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில் முதல் நாளில் இருந்து வசூல் சாதனைகளை படைத்தது.

வசூல் 

15 நாட்களில் ரூ. 1000 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1010 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/kalki-2898-ad-movie-box-office-collection-1721015736

NO COMMENTS

Exit mobile version