கூலி
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14ம் தேதி இப்படம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
12 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மோகினா பாடல் – பூஜா ஹெக்டே சம்பளம்
இதில் மோகினா என்கிற பாடலுக்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார். லிரிகள் வீடியோவில் அவரும் நடிகர் சௌபின் சாஹிரும் நடனம் ஆடியது படு வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், மோனிகா பாடலில் சிறப்பு நடனம் ஆட நடிகை பூஜா ஹெக்டே ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
