Home இலங்கை அரசியல் கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி

0

கல்முனை(kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் எனக்கு ஆவணம் ஒன்றை கையளித்துள்ளார். அதற்காக அங்குள்ள எந்த ஒரு இனத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ(sajith premadasa) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (15.09.2024) நடைபெற்ற தேல்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூவின மக்களும் வாழ்கின்ற இந்த கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்திலே எந்த இனத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் மற்றும் கலையரசன் உள்ளிட்ட மக்கள் அனைவரும் இந்த பாதையிலே இணைந்து கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

உரிய தீர்வுகள் எட்டப்படும்

என்னிடம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள காணி பிரச்சனை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் என்னுடைய ஆட்சிக் காலத்தில் உரிய தீர்வுகள் அதற்காக வேண்டி எட்டப்படும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் எனக்கு ஆவணம் ஒன்றை கையளித்துள்ளார். அதற்காக அங்குள்ள எந்த ஓர் இனத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு வீட்டுத் திட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தான் நான் கடந்த காலத்தில் அதிகளவு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன் என்னுடைய ஆட்சிக் காலத்தில் அந்த வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதலில் சேதம் அடைந்த சியோன் தேவாலயத்தையும் கட்டி எழுப்புவதற்கு நான் தான் உதவி செய்தேன்.

அத்தோடு ஈஸ்டர் குண்டு தாக்குதல் விடயத்திற்கு என்னுடைய ஆட்சிக் காலத்தில் நீதி கிடைக்கும். அதற்காக வேண்டி மூவின மக்களை இணைத்து இந்த பயணத்தை நான் மேற்கொள்வேன்.

இலங்கை தமிழரசு கட்சியும் இணைந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி

இந்த பயணத்தில் இலங்கை தமிழரசு கட்சியும் இணைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், த.கலையரசன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version