Home சினிமா ரோபோ ஷங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல் ஹாசன்.. கதறி அழுத மகள் இந்திரஜா

ரோபோ ஷங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல் ஹாசன்.. கதறி அழுத மகள் இந்திரஜா

0

ரோபோ ஷங்கர் மறைவு 

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ ஷங்கர், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு நிலையில், பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் ரோபோ ஷங்கருக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.

தற்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரோபோ ஷங்கர் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அரசியவாதிகள் பலரும் ரோபோ ஷங்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மறைந்த பிரபல நடிகர் ரோபோ ஷங்கர்… இரங்கல் தெரிவித்த விஜய்

அஞ்சலி செலுத்திய கமல்

இந்த நிலையில், நடிகர் ரோபோ ஷங்கரின் உடலுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார் நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசன். ரோபோ ஷங்கர் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version