அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களை விரக்தி அடைய வேண்டாம் என மற்றுமொரு வேட்பாளரான கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் தோல்விக்கு பின்னர் தனது ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழையப்போவதாக பலர் உணரும் நிலையில், அமெரிக்கர்களின் நலனுக்காக அது அவ்வாறு இருக்காது என தான் நம்புவதாக கமலா ஹரிஸ் கூறியுள்ளார்.
செனட்டின் கட்டுப்பாடு
முக்கிய 7 மாநிலங்களில் 5இல் வெற்றி பெற்றுள்ளதோடு இன்னும் அறிவிக்கப்படாத நெவாடா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ட்ரம்ப் சிறப்பான ஒரு வெற்றியை அடைந்திருப்பதாகவும் கமலா ஹரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.