Home அமெரிக்கா அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்பை விட முன்னிலை வகிக்கும் கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்பை விட முன்னிலை வகிக்கும் கமலா ஹாரிஸ்

0

Courtesy: Sivaa Mayuri

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குப் பதிலாக, ஜனநாயக கட்சியின் சார்பில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், தனது முதல் பிரசார பேரணியில், டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) கடுமையாக தாக்கி பேசினார்.

இந்தநிலையில், ரொய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்பு, அவர் குடியரசுக் கட்சியின் போட்டியாளரை விட ஓரளவு முன்னிலை பெற்றதாகக் காட்டியுள்ளது.

சட்டத்தின் ஆட்சி

தமது, 17 நிமிட உரையில், ஹாரிஸ் ட்ரம்ப் மீது ஆக்ரோசமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்

ட்ரம்பை, தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஒப்பிட்டு அவர் பேசினார். கருக்கலைப்பு அணுகலை விரிவுபடுத்தவும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேருவதை எளிதாக்கவும், துப்பாக்கி வன்முறையை நிவர்த்தி செய்யும் விடயங்களில், ஜனாதிபதிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் கூர்மையான வேறுபாட்டைக் காட்டுவதாக அவர் கூறினார்.

“டொனால்ட் ட்ரம்ப் நம் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்

“நாம் சுதந்திரம், இரக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி அல்லது குழப்பம், பயம் மற்றும் வெறுப்பு நிறைந்த நாட்டில் வாழ விரும்புகிறோமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த பிரசாரத்தின் பின்னர் நடத்தப்பட்ட ரொய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் ஆகியவற்றின் வாக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 44% வீதத்தினர் மத்தியில் ஹாரிஸ் ஆதரவை பெற்றிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version