Home உலகம் அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்திய ட்ரம்ப்: போட்டுடைத்த கமலா ஹாரிஸ்

அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்திய ட்ரம்ப்: போட்டுடைத்த கமலா ஹாரிஸ்

0

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஒரு பொறுப்பற்ற மனிதர் எனவும் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது கிடைத்த எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி தேர்த்ல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் (White House) அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி சிகாகோ (Chicago) மாகாணத்தின் இல்லினாய்ஸ் நகரத்தில் தொடங்கிய ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் கடைசி தினமான இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடன்

அத்துடன், அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) செய்த பங்களிப்பை வரலாறு என்றும் நினைவு கூறும் அவருக்கு என்றும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், “அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சிறந்த ஜனாதிபதி

இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லும் காலம் உருவாகும். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த ஜனாதிபதியாக நான் இருப்பேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது” என்றார்.

மேலும், காசாவில் நடந்து வரும் போர் குறித்து பேசிய கமலா, இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமரிக்கா உடன் நிற்கும். ஆனால் காசாவில் நடந்து வரும் அழிவுகள் மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version