Home முக்கியச் செய்திகள் வரி செலுத்துவோருக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

வரி செலுத்துவோருக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

0

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என கூறி கொண்டு மோசடி கும்பல் ஒன்று பணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழு கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று செலுத்த வேண்டிய வரிக்கான பணத்தை வசூலிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வரிப் பணம்

வரி வகைகள் தொடர்பான வரிப் பணத்தை வசூலிக்கும் போது, ​​வருமானவரி ஆணையர் நாயகத்தின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் மட்டுமே வரிப் பணத்தை வைப்பு செய்ய அறிவுறுத்தப்படுவதாக திணைக்களம் கூறுகிறது.

இதைத் தவிர வேறு எதிலும் பணமோ, காசோலையோ வசூலிக்கப்பட மாட்டாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முறைப்பாடு

இதன் காரணமாக, மோசடி செய்பவர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம் எனவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் ஏற்கனவே சிக்கியிருந்தால், காவல் நிலையங்களில் முறைப்பாடு அளிக்குமாறும் உரிய அறிவிப்பு மூலம் திணைக்களம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version