Home சினிமா என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்… சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம்

என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்… சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம்

0

கம்பம் மீனா

தெற்கத்தி பொண்ணு என்ற சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தான் கம்பம் மீனா.

சீரியல்களை தாண்டி இதுவரை கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் மீனா நடித்திருக்கிறார். கம்பம் மீனா மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனதே விஜய் டிவி சீரியல்கள் மூலம் தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்திலும், பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் ரீச் ஆனார். அவ்வப்போது மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

குற்றச்சாட்டு

கம்பம் மீனா, பொட்டிக் வைத்திருப்பவர்களிடம் நைசாக பேசி ஓசியிலேயே புடவை, ஜாக்கெட் முதலானவற்றை வாங்கிவிட்டு அவர்களுக்கு பிரமோஷனும் தராமல் ஏமாற்றி விடுவதாக வீடியோவில் ஒரு பெண் பேசி இருக்கிறார்.

ஒரு புரொமோஷன் செய்து தரும்போது நமக்கு அதுக்கான டிமாண்ட் கேட்பது வழக்கம் தான், அப்படி தான் நானும் செய்து வருகிறேன். ஒரு செட்டிற்கு நான் புரொமோஷன் கொடுத்தேன், ஆனால் அவர்கள் பேசியது போல் தர மறுத்தார்கள்.

இதனால் நான் அவர்களுடன் தொடர்பை விட்டுவிட்டேன், இந்த சூழலில் தான் என்னைப்பற்றி தவறான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். என்னைப்பற்றி தவறாக கூறிய அந்த பெண் மீது புகார் கொடுக்க இருக்கிறேன் என கம்பம் மீனா வீடியோ வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version