Home இலங்கை கல்வி கண்டி நகரப் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கண்டி நகரப் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

கௌதம புத்தரின் புனித தந்த தாது காட்சிப்படுத்தமையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்ட கண்டி நகர பாடசாலைகள் நாளை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கண்டி தலதா மாளிகையில் கௌதம புத்தரின் புனித தந்த தாது காட்சிப்படுத்தப்பட்டமை காரணமாக கடந்த 24ம் திகதி தொடக்கம் கண்டியில் 61 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

கற்றல் நடவடிக்கைகள் 

இந்நிலையில் குறித்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய மாகாண ஆளுனரின் உத்தரவுக்கு அமைய, மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் நாளை 24 பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

புனித தந்த தாதுவைப் பார்வையிட வருகை தந்த யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம் தொடக்கம் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version