Home இலங்கை அரசியல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மக்களுக்கு விருந்து வைக்கும் வேட்பாளர்

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மக்களுக்கு விருந்து வைக்கும் வேட்பாளர்

0

கண்டி(kandy) மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்(sjb) வேட்பாளர் ஒருவர் பல்வேறு தடவை கண்டியில் உள்ள மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து அவர்களுக்கு கேளிக்கை விருந்து வைத்ததாக மாவட்டத்தின் ஏனைய வேட்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மைய நாட்களில் பல தடவைகள் இவ்வாறான உபசாரங்கள் வழங்கப்பட்டதாக அப்பகுதி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்

இவ்வாறு உபசரிப்பு வழங்குவது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதுடன் பணம் இல்லாத ஏனைய வேட்பாளர்களுக்கு பாரிய அநீதி இழைப்பதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

கண்காணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், வாக்காளர்களுக்கு விருந்து கொடுப்பது உச்சநீதிமன்றத்தால் சம்பந்தப்பட்ட நபரின் எம்.பி பதவியை இரத்து செய்யக் கூட வழிவகுக்கும் என்றும், கடந்த காலங்களில் ஒரு தேநீர் கோப்பைக்காக இரத்து செய்யப்பட்ட வழக்கும் உள்ளது.

கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள்

இதற்கிடையில், இது குறித்து முறைப்பாடு வந்தாலும், அப்பகுதியில் உள்ள சில தேர்தல் அதிகாரிகள், இவ்விடயத்தில் கண்டும் காணாமல் இருப்பது தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version