காந்தாரா
உலக அளவில் கன்னட சினிமாவை கொண்டு சேர்த்த திரைப்படங்களில் காந்தாராவும் ஒன்று. 2022ல் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியைந்த நிலையில், இதனுடைய அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவானது.
ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வெளிவருவதற்கு முன்பே நல்ல விமர்சனம்.. ப்ரீ புக்கிங்கில் Dude படம் செய்துள்ள வசூல்
வசூல்
மக்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காந்தாரா சாப்டர் 1 படம் இதுவரை உலகளவில் ரூ. 670+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
