Home ஏனையவை வாழ்க்கைமுறை தென் மாகாணத்தில் தரமுயர்த்தப்படும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை

தென் மாகாணத்தில் தரமுயர்த்தப்படும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை

0

Courtesy: Bharath

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையானது மகப்பேறு பராமரிப்பு சேவைகள் தவிர தென் மாகாணம் மற்றும் அதனை அண்டிய மாகாணங்களில் உள்ள நோயாளிகளுக்கு மூன்றாம் நிலைச் சேவைகளை வழங்கும் பிரதான சுகாதார நிலையமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாகாணங்களில் உள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார நிலையங்களானது நோயாளிகளை விசேட சேவைகளுக்காக  இவ்வைத்தியசாலைக்கு அனுப்பிவருகின்றன.

தீவிரமடையும் நிலைமை: மறு அறிவித்தல் வரை வழங்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பேராசிரியர் பிரிவு

இந்நிலையில், ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் அதனுடன் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மேலதிகமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக இணைத்து சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டியது இஸ்ரேலையா – பாலஸ்தீனையா!

தமிழர்களுக்கு ஆதரவாக வெளியாகியுள்ள மற்றுமொரு சர்வதேச அறிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version