Home இலங்கை கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டு வரும் இலங்கை :வெளியான புதிய அறிக்கை

கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டு வரும் இலங்கை :வெளியான புதிய அறிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

2024  உலகளாவிய வெளிப்பாடு அறிக்கையின்படி , கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள ஐந்து நாடுகளில் இலங்கையும் (Sri Lanka) ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசில், தாய்லாந்து, நைஜர் மற்றும் பிஜி ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் நிலைமை: மறு அறிவித்தல் வரை வழங்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

உலக மக்கள்தொகை

கடந்த 21 ஆம் திகதி  வெளியிடப்பட்ட குறித்த அறிக்கை, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருத்துச் சுதந்திர நெருக்கடியின் மூலம் வாழ்கின்றனர் என்றும் சுதந்திரமாக கருத்தை வெளியிட முடியாது என்பதையும் காட்டுவதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், இந்த நெருக்கடியில் வாழும் மக்களின் சதவீதம் 39 நாடுகளில் 53 சதவீதம் அல்லது சுமார் 4 பில்லியன் மக்களாக உயர்ந்தது.

இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் 161 நாடுகளில் இந்த குறிகாட்டிகளின் வெளிப்பாட்டையும் இந்த ஆய்வு கண்காணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இறுதி ஏல விற்பனைக்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள்

பொது வேட்பாளர் விடயம் ஒரு சதி திட்டம்: குற்றம் சுமத்தும் தமிழர் தரப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version