Home அமெரிக்கா அமெரிக்காவில் நடைபெறவுள்ள இலங்கை உட்பட்ட 29 நாடுகள் பங்கேற்கும் போர் பயிற்சி

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இலங்கை உட்பட்ட 29 நாடுகள் பங்கேற்கும் போர் பயிற்சி

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை (Sri Lanka) உட்பட்ட சுமார் 29 நாடுகள், 40 போர்க் கப்பல்கள், 3 நீர்மூழ்கிக் கப்பல்கள், 14 தேசிய தரைப்படைகள், 150 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களின் போர் பயிற்சி ஒன்று நடத்தப்படவுள்ளது

ஹவாய் தீவுகளில் (Hawaiian Islands)  2024 ஜூன் 26 முதல் ஆகஸ்ட்  02ஆம் திகதி வரை இந்த பயிற்சிகள் நடத்தப்படும் என்று அமெரிக்காவின் பசுபிக் படைப்பிரிவு அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ரிம் ஒஃப் தி பசிபிக் (RIMPAC) பயிற்சி தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பு

இது, நாடுகளுக்கு இடையில் உறவுகளை வளர்ப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு பயிற்சியாகும்,

கடல் பாதைகளின் பாதுகாப்பையும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பயிற்சியாக அமைந்துள்ளது.

1971இல் தொடங்கப்பட்ட தொடரின் 29வது பயிற்சியாக இது இந்த வருடம் நடத்தப்படவுள்ளது

இந்த ஆண்டின் பயிற்சியில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், புருனே, கனடா, சிலி, கொலம்பியா, டென்மார்க், ஈக்வடோர், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பெரு, கொரியா குடியரசு, பிலிப்பைன்ஸ் குடியரசு, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, டோங்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.  

NO COMMENTS

Exit mobile version