Home முக்கியச் செய்திகள் மாணவிகள் வன்புணர்வு : கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது

மாணவிகள் வன்புணர்வு : கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது

0

பதின்ம வயதுடைய இரண்டு மாணவிகளை வன்புணர்விற்கு உள்ளாக்கிய கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பகா(gampaha), தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொம்பே காவல்துறையினர் தெரிவித்தனர்.

16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே இவ்வாறு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டவர்களாவர்.

பாடசாலையில் கராத்தே பயிற்சி

மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக மேற்படி சந்தேக நபர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிக்கும் போது இந்த இரு மாணவிகளையும் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை தொம்பே காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version