குக் வித் கோமாளி ஷோவில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
போட்டியாளராக வந்திருக்கும் VJ பிரியங்கா தலையீடு அதிகமாக இருக்கிறது. புகார் அளித்தால் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சுயமரியாதை முக்கியம் என விலகி விட்டேன் என மணிமேகலை கூறி இருக்கிறார்.
கர்மா
இந்நிலையில் மணிமேகலை செய்தது அவருக்கே திரும்பி நடக்கிறது என அனிதா சம்பத் மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ, அவர் அதே போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார் என அனிதா சம்பத் கூறி இருக்கிறார்.
மணிமேகலையால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதை தான் அனிதா சம்பத் இப்படி கூறி இருக்கிறார்.