Home இலங்கை அரசியல் ஈபிடிபியுடன் தமிழரசுக்கட்சி கைகோர்த்ததை வரவேற்கும் கருணா

ஈபிடிபியுடன் தமிழரசுக்கட்சி கைகோர்த்ததை வரவேற்கும் கருணா

0

தமிழரசுக்கட்சியின்(ITAK) பதில் தலைவர் சிவிகே சிவஞானம் -டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து ஆட்சியமைக்க முயற்சித்ததை நாங்கள் வரவேற்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் 12 சபைகளில் ஆட்சியமைக்க முடியும்.

வடமாகாணத்தில் ஆட்சியமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சந்திக்கின்றார்கள்.

தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்களுக்கான சேவையாற்றிய தலைவர் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version