Home இலங்கை அரசியல் கருணா, பிள்ளையான் – வியாழேந்திரன் ஒரே அணியில் : பின்னணியில் புலனாய்வுப் பிரிவு

கருணா, பிள்ளையான் – வியாழேந்திரன் ஒரே அணியில் : பின்னணியில் புலனாய்வுப் பிரிவு

0

மட்டக்களப்பில் (Batticaloa) உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் (கருணா அம்மான்) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த தரப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.

இந்த கூட்டணி தற்போது தமிழ் அரசியல் வட்டாரம் உட்பட தென்னிலங்கை அரசியல் வட்டாரத்திலும் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தலைமைகள் தமது கருத்தை வெளியிட்டிருந்ததுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனும் தமது விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் இந்த கூட்டணியின் பின்புலம் மற்றும் முன்னெடுக்கும் ஆட்சி பொறிமுறைகள் தொடடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழச்சி,

https://www.youtube.com/embed/fJCIQeRZkFo

NO COMMENTS

Exit mobile version