Home இந்தியா திரைப்பட வசனங்களால் மக்களை ஏமாற்றும் விஜய்! கரூர் கொடூரம் தொடர்பில் சீமான் ஆதங்கம்

திரைப்பட வசனங்களால் மக்களை ஏமாற்றும் விஜய்! கரூர் கொடூரம் தொடர்பில் சீமான் ஆதங்கம்

0

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தமைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முழுக் காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திரைப்பட வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரைப்பட வசனங்கள்

மேலும் கருத்து தெரிவித்த அவர், “கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட காணொளியில் அவருக்கு சிறிதும் மனவலி இருப்பதாக தெரியவில்லை.

திரைப்பட கதாநாயகன் வசனங்களை பேசக் கூடாது. அது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல.

விஜய் அங்கு சென்றதால் தான் கூட்ட நெரிசல் உருவானது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி தான் பச்சிளம் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

ஆகவே, கரூர் சம்பவத்திற்கு முழுமையான காரணம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான்” என தெரிவித்துள்ளார்.   

https://www.youtube.com/embed/84_9PlvT1_E

NO COMMENTS

Exit mobile version