Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு.. முக்கிய வசதி மட்டுப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு.. முக்கிய வசதி மட்டுப்பாடு

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் நுழைவு வசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 22.00 மணி முதல் நள்ளிரவு (00:00) வரை, வருகையாளர்களுக்கான புறப்பாட்டு மண்டப நுழைவு வசதி வழங்கப்பட மாட்டாது.

நுழைவு வசதி

இந்த நடவடிக்கை, அனைத்து பயணிகளின் மற்றும் விமான நிலைய பயனாளர்களின் வசதியை உறுதிசெய்ய நடைமுறைப்படுத்தப்படுகிறது என விமான நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நேற்று முன்தினம், நள்ளிரவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட அசௌகரிய நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. 

விமான நிலைய செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். 

குழப்ப நிலை

இந்த நெருக்கடி காரணமாக சில பயணிகள் தமது விமானங்களை தவற விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் பிரச்சினைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 

குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவான விமானங்கள் பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த காரணத்தினால், அதிகளவான பயணிகள் விமான நிலையத்திற்குள் வந்தமையே இதற்கு காணரம் என தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், விமான நிலைய நிர்வாகத்தில் முறையான திட்டமிடல் இன்மையால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். 

இந்நிலையிலேயே தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் நுழைவு வசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version