கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைமையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை
வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்
இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கையில்,
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என கூறுவது முற்றிலும் பொய்யானது.
இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும்.
இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |