Home இலங்கை அரசியல் போலி செய்திகளின் மூலம் தனிப்பட்ட தாக்குதல்கள்: கௌசல்யா முறைப்பாடு

போலி செய்திகளின் மூலம் தனிப்பட்ட தாக்குதல்கள்: கௌசல்யா முறைப்பாடு

0

சமூக ஊடக தளங்களில் தம்மைப் பற்றிப் பரப்பப்படும் தவறான செய்திகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா அரியரத்ன(Kaushalya Ariyarathne) குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

குறித்த செய்திகளில் தமக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் ஆதாரமற்ற கூற்றுக்கள் உள்ளதாக அரியரத்ன கூறியுள்ளார்

இந்த விவகாரத்தை விசாரித்து பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சி

பெண்கள் அரசியலில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சியாக இந்தத் தாக்குதல்கள் அமைந்திருக்கலாம் என்று கௌசல்யா அரியரத்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இத்தகைய மலிவான தந்திரோபாயங்கள், பெண்களை அரசியலில் பங்கேற்பதைத் தடுக்கும் என்று யாராவது நம்பினால், அவர்கள் மிகவும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version