Home சினிமா எனது கணவர் வீட்டில் கூட குழந்தைகள் பற்றி கேட்கிறார்கள், ஆனால்?… சீரியல் நடிகை சைத்ரா ஓபன்...

எனது கணவர் வீட்டில் கூட குழந்தைகள் பற்றி கேட்கிறார்கள், ஆனால்?… சீரியல் நடிகை சைத்ரா ஓபன் டாக்

0

நடிகை சைத்ரா 

தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் நாயகியாக நடிக்க களமிறங்கியவர் நடிகை சைத்ரா ரெட்டி.

அந்த தொடர் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்த தொடரிலேயே வில்லியாக நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடிக்க அவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உருவானது.

சீரியல் முடிந்த கையோடு சன் டிவி பக்கம் வந்தவர் கயல் என்ற தொடரில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

குழந்தை

நடிகை சைத்ரா ரெட்டி கடந்த 2000ம் ஆண்டு ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து பலரும் கேட்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், எல்லோருமே குழந்தை எப்போது என கேட்கிறார்கள், நாங்களும் வரும்போது வரட்டும் என்று காத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் 2 வருடத்திற்குள் ஒரு குட்டி சைத்து வந்திடுவாங்க.

ஆனால் கமிட்மென்ட் என்று ஒன்று உள்ளது அல்லவா, அதையும் பார்க்க வேண்டும்.

குழந்தை என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? எனக்கும் ரொம்பவும் பிடிக்கும் என கூலாக பதில் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version