Home இலங்கை அரசியல் மோடியின் கட்சியில் இணைந்த முன்னாள் சென்னை வீரர்

மோடியின் கட்சியில் இணைந்த முன்னாள் சென்னை வீரர்

0

இந்திய கிரிக்கெட் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளின் முன்னாள் சகலதுறை வீரர் கேதர் ஜாதவ் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்துள்ளார்.

இவர் 2014ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து 2020ஆம் ஆண்டு தனது இறுதி சர்வதேச போட்டியில் விளையாடினார்.

அத்துடன், ஐபிஎல் தொடரில் டெல்லி, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளை இவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

சிறிய பங்களிப்பு

இந்நிலையில், அவர் மகாராஷ்டிர அமைச்சரும், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அக்கட்சியில் இன்று(08.04.2025) இணைந்துள்ளார். 

இதன்போது, கருத்து வெளியிட்ட கேதர் ஜாதவ், பாஜகவுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்வதே எனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில், பாஜக வளர்ச்சி அரசியலைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version