Home சினிமா மகாநதி படத்தில் முதலில் நடிக்க மறுத்துவிட்டேன்.. காரணத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

மகாநதி படத்தில் முதலில் நடிக்க மறுத்துவிட்டேன்.. காரணத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

0

கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வெளிவந்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தின் மாஸ் அப்டேட்.. என்ன தெரியுமா?

தமிழ், தெலுங்கு என நடித்து வந்தவர் மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார். இந்நிலையில், மகாநதி படத்தில் நடிக்க முதலில் மறுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

காரணம் இது தானா

அதில், ” இந்த படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் எனக்கு கதை கூறும்போது நான் நடிக்க மறுத்துவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் சாவித்ரி அம்மாவின் கதாபாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயத்தில் அதை செய்தேன்.

ஆனால், தயாரிப்பாளர்கள் ஸ்வப்னாவும், பிரியங்காவும் என் பதிலை கேட்டு, ‘என்ன இந்த பொண்ணு? இது போன்ற வாய்ப்பை நிராகரித்துவிட்டார்? என்று அதிர்ச்சி அடைந்தனர். பின், என் மனதை மாற்றி நடிக்க வைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version