நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
32 வயதாகும் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வருவது வாடிக்கை தான். அவர் காதலில் இருப்பதாகவும் பல முறை செய்திகள் வந்திருக்கிறது. இருப்பினும் தனது காதலை பற்றி கீர்த்தி வெளிப்படையாக எதுவும் பேசியது இல்லை.
திருமணம்
இந்நிலையில் வரும் டிசம்பர் 11ம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம்.
நீண்ட நாள் காதலரை அவர் கரம்பிடிக்க இருக்கிறார். அவர் யார் என விரைவில் கீர்த்தியே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.