நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழில்களிலும் நடித்து வந்த அவர் தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியில் நுழைந்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த வாரம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வரும் டிசம்பர் 25ம் தேதி பேபி ஜான் படம் ரிலீஸ் ஆகிறது.
சம்பளம்
தெறி படத்தில் சமந்தா நடித்த ரோலில் தான் ஹிந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். அதற்காக அவர் 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறாராம்.
தமிழில் கீர்த்தி ஒரு படத்திற்கு 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார். ஹிந்தியில் நுழைந்ததும் அவருக்கு அதை விட இரண்டு மடங்கு சம்பளம் கிடைத்து இருக்கிறது.