Home இலங்கை அரசியல் ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, முன்னாள் அமைச்சருடன் அவரும் அதே சிறைச்சாலை அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் அதே சிறைச்சாலை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை

அதற்கமைய, M2 இல் 11 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் ரமித ரம்புக்வெல்ல சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மருத்துவ உபகரணங்களுடன் சிறைச்சாலைக்கு வந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து கேட்டபோது, ​​இரவில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் போது இந்தக் கருவியைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் சிறை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர் அந்தக் கருவியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உடல்நல பரிசோதனை

ரமித ரம்புக்வெல்லவின் உடல்நிலையை பரிசோதிக்க சிறைச்சாலை மருத்துவர் ஒருவர் சிறைச்சாலைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்ல, மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்டார்.

சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வந்தபோது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரமித ரம்புக்வெல்லவை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தியபோது, ​​சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version