Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகனின் சொத்துக் குவிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகனின் சொத்துக் குவிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்

0

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல செயற்பட்ட காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல பெருந்தொகை சொத்துக்களை குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 18 மாத காலப்பகுதியில் 27 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

சொத்துக் குவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய அவரது மகன் ஒன்றரை ஆண்டுகளில், ஈட்டிய வருமானத்தை வெளிப்படுத்த முடியாத வகையில் 27 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார்.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யவும், ஆடம்பரமான நவீன கார்களை வாங்குவதற்கும், அவரது மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புகளை செய்யவும் 27 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல வெளிப்படுத்த முடியாத முறையில் சொத்துக்களை குவித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரமித் ரம்புக்வெல்ல, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version