அவிசாவளை மற்றும் ஹன்வெல்லா பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து, லக்சபான நீரத்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் மற்றும் காசல்ரீ நீர்தேக்கத்தின் ஒன்பது வான்கதவுகளும், திறக்கப்பட்டுள்ளன.
உயரும் நீர்மட்டம்
மவுசாகல நீர்தேக்கமானது மூன்று அடி நீர் நிரம்பினால் வான் பாய ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மவுசாகல நீர்த்தேக்க வான்கதவுகள் திரக்கப்பட்டால் களணி கங்கையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
